Sunday, April 11, 2010

படித்ததில் பிடித்தது

''காதல்ன்றது அம்மா கை சமையல்; காமம்ன்றது, நடமாடும் கையேந்தி பவன்ல நூடுல்ஸ் சாப்பிடுற மாதிரி. பிளாடோனிக் நட்புன்றது, ஆஞ்சநேயர் கோவில்ல கிடைக்கிற பிரசாதம் மாதிரி.

மனிதர்கள் ஏன் இப்படி இருக்கின்றனர்? காற்றைப் போல, ஒளியைப் போல இயல்பாக இல்லாமல், ஏன் இப்படி நயவஞ்சகமும், பொல்லாத்தனமுமாக அலைகின்றனர்? நம்பி வந்த மனிதனை ஏமாற்றுவது என்பது, தூங்குபவனைக் கொல்வதற்கு சமம் இல்லையா?